• Apr 15 2026

ஜீவா மிரட்டல் நடிப்பில் பிளாக்! இரண்டு நாட்களில் செய்த வசூல்! எவ்வளவு தெரியுமா

shali / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பிளாக். கடந்த 11ஆம் தேதி வெளிவந்துள்ள இந்த திரைப்படம் இயக்குனர் பாலசுப்பிரமணி என்பவரால் இயக்கப்பட்டுள்ளது.  வேட்டையன் படம் 10ஆம் தேதி வெளிவந்த நிலையில், இப்படத்தை 11ஆம் தேதி வெளியிட்டனர்.


வித்தியாசமான திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார் ஜீவா என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


இந்த நிலையில், Black திரைப்படம் வெளிவந்து 2 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் Black படத்திற்கு வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement