• Apr 15 2026

லோகேஷின் ஃபைட் கிளப் திரைப்படம் மூன்று நாட்களில் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

மாநகரம் படம் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், 5 படங்களில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171, கார்த்தியின் கைதி 2 ஆகிய படங்களை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். G Squad என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய லோகேஷ், முதலாவதாக 'ஃபைட் கிளப்' என்ற படத்தை தயாரித்துள்ளார். 

அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் 'உறியடி' பிரபலம் விஜய்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


இந்த படம் வெளியான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் மூன்று நாட்களில் ஐந்தே கால் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இளைஞர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதாகவும் இன்னும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement