• Dec 19 2025

பாலாஜியின் சொர்க்கவாசல் திரைப்படம் 2 நாட்களில் உலகளாவிய வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது பயணத்தை நகைச்சுவை நடிகராக தொடங்கி, இன்று ஹீரோவாக தனக்கென்று ஒரு மாறுபட்ட இடத்தை பிடித்துள்ளவர் ஆர்.ஜே. பாலாஜி.இயக்கத்திலும் நடிப்பிலும் தன்னிகரற்ற திறமையை வெளிப்படுத்திய ஆர்.ஜே. பாலாஜி, "ரன் பேபி ரன்" படத்தின் மூலம் மாறுபட்ட கதாபாத்திரங்களில் களமிறங்கினார்.


இதனைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள புதிய படம் "சொர்க்கவாசல்", நகைச்சுவைக்கு இடமின்றி தீவிரமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கிய இந்த படத்தில் பாலாஜியுடன் கருணாஸ், நட்டி நட்ராஜ், செல்வராகவன், மற்றும் சானியா அய்யப்பன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுவும் அல்லாமல், இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1.1 கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பதிவு படத்திற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement