• Oct 23 2026

'கேம் சேஞ்சர்' ரிலீஸ் தேதி மாற்றமா? புதிய தேதியை அறிவித்த இயக்குனர் ஷங்கர்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

"கேம் சேஞ்சர்" இயக்குனர் சங்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ராம்சரண் ,தேஜா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உருவான நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் சுமார் ரூ.250 கோடியில் உருவானதாக கூறப்படும் நிலையில் இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என்று தகவல் வெளியானது.


தற்போது அதிகாரபூர்வமாக படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சங்கராந்தி தினத்தில் வெளியாகும் என்றும் அதாவது ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகும் போது சங்கராந்தி தினம் தான் சரியான ரிலீஸ் தேதியாக இருக்கும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement