• Nov 02 2024

யுவன் சங்கர் ராஜாவை அறைந்த இளையராஜா! நடந்தது என்ன? பகிர்ந்த யுவன்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் யுவன் ஷங்கர் ராஜா. இன்று பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராகவும் யுவன் மாறினார். ஒரு நடிகருக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் இருப்பார்களோ அதே அளவிற்கு யுவன் ஷங்கர் ராஜாவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர்.


விஜய்யின் GOAT படத்திற்கு இசையமைத்த யுவன் அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா கலந்துகொண்ட பேட்டியில் தன் தந்தை இளையராஜா பற்றி பேசியிருந்தார். சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் பற்றி யுவன் அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


இளையராஜா பீச்சிற்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தாராம். எனவே யுவன் ஷங்கர் ராஜா ரெடியாகி காரில் அமர்ந்து வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தாராம். அந்த சமயம் பார்த்து ஒரு தயாரிப்பாளர் வீட்டிற்கு வந்து இளையராஜாவுடன் பேசிக்கொண்டே இருந்தாராம். பொறுமையை இழந்த யுவன் ஷங்கர் ராஜா கார் ஹார்னை அடித்துக்கொண்டே இருந்தாராம். 


உடனே கோபமான இளையராஜா யுவன் ஷங்கர் ராஜாவை கடுப்பில் அடித்துவிட்டாராம். அப்போது தான் தன் தந்தையிடம் முதல் முறையாக அடிவாங்கினாராம் யுவன் ஷங்கர் ராஜா. இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 


Advertisement

Advertisement