• Mar 27 2023

‘பத்து தல’ படத்தின் ஜிவிஎம் போஸ்டரை அதிரடியாக வெளியிட்ட படக்குழு; இயக்குநரின் கௌதம் வாசுதேவின் பிறந்தநாள் ட்ரீட்!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தனது தனித்துவமான படைப்புகளால் சினிமா ரசிகர்களிடையே தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பெற்றவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தனது பல படங்களுக்கு தயாரிப்பாளராகவும், ஒரு சில படங்களில் பாடகராகவும் இருந்துள்ளார். 


இவர் சினிமாவுக்கு அறிமுகமாகி 22 ஆண்டுகள் தற்போது கடந்து விட்டது. அந்தவகையில் எண்ணிப்பார்த்தால் தமிழில் 12 படங்கள், 2 ஆந்தாலஜி எபிசோட்கள், 4 தெலுங்கு, 2 இந்தி படங்கள் சேர்ந்து மொத்தம் 20 படங்கள் மட்டுமே கௌதம் இயக்கியுள்ளார். ஒவ்வொன்றும் ஒரு ரகம். 


கௌதமின் படங்களில் கதை ரொம்ப சிம்பிளாகவே இருக்கும். ஆனால் காட்சிகளுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் சிம்பிள் கதையையும் சீரியஸாக மாற்றி விடும்.  இந்நிலையில் இன்று இவர் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இதனை முன்னிட்டு 'பத்து தல' படக்குழுவினர் அப்படத்தின் போஸ்டர் ஒன்றினை சர்ப்பிரைஸ் ஆக வெளியிட்டுள்ளனர். அதாவது இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இவரின் பிறந்த நாளிற்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement