• May 03 2024

KGF 3 திரைப்படத்தினை பிரசாந்த் நீல் இயக்கவில்லையா?- அப்போ கதாநாயகன் யார் தெரியுமா?

stella / 4 months ago

Advertisement

Listen News!


பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'கேஜிஎப்-2'. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 

ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது.


இதனால் கண்டிப்பாக KGF படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் நாள் பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருந்தனர். அதன்படி ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக KGF 2 திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

மேலும் வசூலிலும் கூட ரூ. 1250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. இதனை அடுத்து இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளது என்று கூறப்பட்டது.ஆனால், அப்படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்க போவதில்லை என தெரியவந்துள்ளது.

KGF 1 மற்றும் KGF 2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பிரஷாந்த் நீல் KGF 3 படத்தை இயக்கப்போவதில்லை என அவரே கூறியுள்ளார். ஆனால், KGF 3 படத்தின் ஹீரோ யாஷ் தான் என்றும் தெரிவித்துள்ளார்.பிரஷாந்த் நீல் KGF 3-ஐ விட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement