தல அஜித் ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷலான ஒரு படம் என்றால் அது மங்காத்தா தான். இயக்குநர் வெங்கட் பிரபு – நடிகர் அஜித் குமார் கூட்டணியில் 2011ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக மாறிய இப்படம், இப்போது ரீ ரிலீஸில் மீண்டும் திரையரங்குகளை அதிர வைத்துள்ளது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் மீண்டும் வெளியான மங்காத்தா, முதல் நாளிலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. படம் வெளியாகிய காலத்தில் எந்த அளவுக்கு மாஸ் ஹிட் அடித்ததோ, அதே அளவுக்கு இப்போது ரீ ரிலீஸிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மங்காத்தா படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து, பல திரையரங்குகளில் விசில், கைதட்டல் என ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக, அஜித்தின் வில்லன்-ஹீரோ கலந்த நெகட்டிவ் கேரக்டர், அவரது ஸ்டைல், டயலாக் டெலிவரி, ஸ்கிரீன் பிரசென்ஸ் ஆகியவை இன்றளவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, படம் முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் ரூ. 5.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமல்லாமல், இதுவரை தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களிலேயே முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் மங்காத்தா படைத்துள்ளது. பழைய படம் என்றாலும், அஜித் ரசிகர்களின் ஆதரவு இன்னும் குறையவில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.
Listen News!