• Jan 18 2025

லியோ படத்திலாவது விஜய் காரப்பொரி வாங்கித் தந்தாரா?- ஓபனாகப் பதிலளித்த த்ரிஷா- கத்திக் கூச்சலிட்ட ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

லியோ' படத்தின் வெற்றிவிழா தற்போது மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. தளபதி விஜயின் வருகையை தொடர்ந்து, நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் துவங்கிய நிலையில், இப்படத்தில் நடித்த பிரபலங்கள், மற்றும் படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து பேச துவங்கியுள்ளனர்.

முதல் ஆளாக மேடைக்கு வந்து பேசிய, இயக்குனர் மிஷ்கின் "ஒரு மாசத்துக்கு முன் ஏர்போர்ட்டில் யூரின் போகும் போது கூட என்னை விடாமல் ஒருவர் லியோ அப்டேட் கேட்டார். இதை தொடர்ந்து வெளிநாட்டுக்கு சென்றாலும் அங்கும் 'லியோ' படத்தின் அப்டேட் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு விஜய் ரசிகர்கள் மனதில் குடியேறியுள்ளார் என்றார்.


தொடர்ந்து பேசிய அர்ஜுன் விஜய் கூடியவிரைவில் அரசியலுக்கு வந்துவிடுவார் அவருடைய அமைதி தான் அவருக்கு மிகப் பெரிய ஆயுதம் என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்டு ரசிகர்கள் கூச்சலிட்டனர்.

இதைத் தொடர்ந்து பேசிய த்ரிஷா படத்தில் தன்னுடன் நடித்த எல்லோருக்கும் படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் தன்னுடைய நன்றைத் தெரிவித்தார் . தொடர்ந்து பேசிய அவர் நிறைய நாள் பார்க்காமல் இருந்த பிரெண்டைப் பார்த்தால் எப்பிடிப் பீல் இருக்குமோ அப்பிடித் தான் விஜய்யைப் பார்க்கும் போது இருந்திச்சு. 

அதே பாசம்,அதே கவனம்,அதே நட்பு எல்லாம் அப்பிடியே தான் இருக்கு என்று கூறினார். மேலும் தொகுப்பாளர் த்ரிஷாவிடம் இந்தப் படத்திலாவது சேர் காரப்பொரி வாங்கித் தந்தாரா எனக் கேட்க இல்லை என்று சொல்ல, அப்போ இன்னொரு படத்தில் இணைந்து நடித்திட வேண்டியது தான் என்று சொல்ல த்ரிஷா கண்டிப்பாக என்று சொல்கின்றார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement