• Aug 29 2026

விஜய்க்கு வாழ்த்து சொல்லவே இல்லையா? மௌனம் கலைத்த ரஜினி.! நடந்தது என்ன தெரியுமா?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜயின் பிறந்தநாள் நேற்று முன்தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இருப்பினும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டன.


இந்த சூழலில், இன்று நடைபெற்ற தலைவர் 173 திரைப்படத்தின் பெயர் வெளியீட்டு விழா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு “தர்மன்” என அதிகாரபூர்வமாக பெயர் அறிவிக்கப்பட்டது. விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம், விஜயின் பிறந்தநாள் வாழ்த்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “நான் ஏற்கனவே விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவிட்டேன்” என்று தெளிவாக கூறினார். இதன் மூலம் சமூக வலைதளங்களில் பரவி வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ரஜினியின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதுடன், இரு பிரபலங்களுக்கிடையே எந்தவித மனக்கசப்பும் இல்லை என்பதை உணர்த்துவதாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும், “தர்மன்” திரைப்பட அறிவிப்பு மற்றும் ரஜினியின் இந்த விளக்கம் ஆகியவை இன்று திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளன.


Advertisement

Advertisement