ஜே.எஸ்.கே சதீஷ் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலமான பாலாஜி நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஃபயர். காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், ரக்ஷிதா மகாலட்சுமி, சாட்சி அகர்வால், காயத்ரி சாம், சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம் புலி உட்பட பலர் நடித்துள்ளார்கள்.
ஃபயர் திரைப்படம் உண்மையான சம்பவத்தை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ளதாம். எனவே இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதா? இல்லையா? என்பதை விமர்சனத்தின் ஊடாக விரிவாக பார்ப்போம்.
இந்த படத்தின் கதை களத்தை நோக்கினால், தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ஒன்றைத்தான் மையமாகக் கொண்டு எடுத்துள்ளார்கள். ஒரு டாக்டர் பல பெண்களுடைய வாழ்க்கையில் விளையாடி உள்ளார். அதில் பாலாஜி முருகதாஸ் டாக்டராக காசி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பிசியோதெரபியாக இருக்கும் பாலாஜியை காணவில்லை என்று அவருடைய பெற்றோர் போலீசில் புகார் அளிக்க, வழக்கை விசாரித்த போது அதில் நான்கு பெண்கள் பற்றிய விபரம் தெரிய வருகிறது. மேலும் பாலாஜி அந்தப் பெண்களுடன் நெருக்கமாக இருந்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் வாங்கி உள்ளார், மேலும் பாலாஜியால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டதும் தெரிய வருகிறது.
பாலாஜியை கண்டுபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் ஒருவரும் அழுத்தம் கொடுக்கின்றார். அதற்குப் பிறகு என்ன நடந்தது? பாலாஜியை கண்டுபிடித்தார்களா? பெண்களுக்கு ஏற்பட்ட நிலை என்ன? என்பதுதான் படத்தின் மீதி கதையாக காணப்படுகின்றது.
இந்த படத்தில் பாலாஜி நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தாலும் தன்னுடைய கேரக்டருக்கு ஏற்ற மாதிரி கச்சிதமாக நடித்து முடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களாக ரச்சிதா, சாட்சி அகர்வால், சாந்தினி, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தில் தாராள கவர்ச்சியையும் காட்டியுள்ளார்கள். சமூக விழிப்புணர்வு கதையாக எடுக்கப்பட்ட இந்த படம் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கொண்டு நகர்த்தப்பட்டது பாராட்டத்தக்கதாக காணப்படுகிறது. மேலும் காசி போன்றவர்களின் முகத்திரையை இந்த படம் வெட்ட வெளிச்சம் ஆக்கி உள்ளது.
இந்த படத்தின் மைனஸ் என்னவென்றால், சில கதாபாத்திரங்களை இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் இதில் நடித்துள்ள நாயகிகள் எல்லை மீறிய கவர்ச்சியில் இறங்கி உள்ளார்கள்.
இரண்டாவது பாதியும் சலிப்பை ஏற்படுத்தும் வண்ணத்தில் அமைந்துள்ளது . மேலும் பெண்களுக்கு எதிராக அநீதிகளை பற்றி பேச வேண்டிய படமாக காணப்பட்ட போதும் அதனை தவறவிட்டு ஆபாச காட்சிகள் நிறைந்த படமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!