• Feb 16 2025

மகிழ் திருமேனியின் நிஜப் பெயர் என்ன தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா..?

Aathira / 12 hours ago

Advertisement

Listen News!

கௌதம் மேனன், செல்வராகன் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணி ஆற்றியவர் தான் மகிழ் திருமேனி. இவருடைய முதலாவது படமாக  'தடையற தாக்கு' திரைப்படம் அமைந்தது. அதன் பின்பு டிஜிட்டல் படப்பிடிப்பில் 'மீகாமன்' என்ற படத்தை இயற்றினார்.

இவருடைய இயக்கத்தில் இறுதியாக விடாமுயற்சி படம் வெளியானது. இந்த படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். விடாமுயற்சி திரைப்படம்  கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில், மகிழ் திருமேனி பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


அதாவது அவருடைய உண்மை பெயர் என்ன என்று கேட்கப்பட்டபோது  Morgan anthony என்பது தான் தனது உண்மையான பெயர். ஆனால் அதை தமிழில் எழுதும் போது மோர்கன்னு தான் எழுதணும் இல்ல மார்க்னு தான் எழுதணும். 

இந்தப் பெயரை தமிழில் சரியா எழுத முடியாது. இது தான் முதல் காரணம். இரண்டாவதாக என்னோட பெயர் தமிழ்ல இருக்கணும்னு ஒரு ஆசை.. அதனால எனக்கு நானே வச்சிக்கிட்ட புனைப் பெயர்  மகிழ் திருமேனி என தெரிவித்துள்ளார்.


மேலும் தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் தான் மகிழ் திருமேனி என பெயரை வைத்தேன். தமிழில் பெயர் வைப்பது என முடிவெடுத்த பிறகு அது தமிழில் இருப்பதுடன் புழக்கத்தில் உள்ள பெயராகவும் இருக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினேன்.

இந்த பெயரை சொல்வதற்கு இனிமையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகிழ் திருமேனி என்ற பெயரை வைத்ததாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement