• May 19 2024

2024ம் ஆண்டு ரேஸில் பலகோடி லாபம் பார்த்தது பாலிவுட்டா? ஹாலிவுட்டா? டோலிவுட்டா? வெளியான ஷாக் லிஸ்ட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அருண்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான  படங்கள் பெரிதளவில் எடுபடவில்லை. வசூலிலும் ஓரளவுதான் பெற்றுள்ளது, இதன் மூலம் தமிழ் சினிமா மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதை தொடர்ந்து குடியரசு தின விடுமுறை மற்றும் காதலர் தினம் என அனைத்தையும் டாக்கெட் செய்து, போட்டி போட்டு தமிழ்  படங்கள் வெளியானது. ஆனால் அத்தனை படங்களும் தோல்வியை சந்திப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளில் வெளியான திரைப்படங்கள் வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றன.

இந்த நிலையில், 2024ம் ஆண்டு பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட்  மற்றும் மலையாளத்தில் வெளியான படங்களின் வசூல் விபரம் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.


அதன்படி, பாலிவுட்டில் Fighter படம் 370 கோடி வரை வசூலித்து முதலாவது இடத்தை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து Shaitaan படம் 205 கோடியும், TBMAUJ படம் சுமார் 145 கோடி வரையிலும் வசூலித்துள்ளதாம்.

இதையடுத்து, டோலிவுட்டில் ஹனுமான் திரைப்படம் 312 கோடியும், குண்டூர்காரம் 267 கோடியும், TilluSquare படம் 91 கோடியும் வசூலித்துள்ளது.


இதை தொடர்ந்து, ஹாலிவுட்டில் கேப்டன் மில்லர் 104 கோடியும், அயலான் 83 கோடியும் வசூலித்துள்ளது.

அதேபோல, மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் 221 கோடியும், பிரேமலு 135 கோடியும், ஆடு ஜீவிதம் 87 கோடியும் வசூலித்து உள்ளது.


ஆக மொத்தத்தில் தமிழ் சினிமா மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement