• May 20 2024

தந்தையின் உடல் நிலை குறித்து பேசிய துருவ் விக்ரம்- உடல்நிலை தேற பிரார்த்தனை செய்வதாக டுவிட் போட்ட நடிகர் சாந்தனு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காதல் ஹீரோவாக அறிமுகமாகி இன்று ஆக்ஷ் ஹீரோவாக உயர்ந்து நிற்பவர் தான் விக்ரம். ஆரம்பத்தில் இவர் தெரிவு செய்த படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வெளியான சேது படம்தான் அவருக்கு சிறப்பான நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

அந்த வகையில் இவர் நடிப்பில் பிற்காலத்தில் வெளியான ஐ அந்நியன் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருக்கின்றன. இவ்வாறு வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடித்து வரும் இவரது நடிப்பில் இறுதியாக மகான் படம் வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து கோப்ரா என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. இந்த நிலையில் சற்று முன்னர் இவருகு்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவரது உடல்நிலை தேற திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கண்டுள்ளனர்.

நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் உடல்நிலை தேற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். இதனிடையே ட்விட்டர் பக்கத்தில் சியான் விக்ரமை ட்ரெண்டிங் செய்து அவரது உடல்நிலை தேற வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதனிடையே, விக்ரமிற்கு மாரடைப்பு என வந்த செய்திகள் தவறானவை என்றும் அவருக்கு லேசான நெஞ்சு வலி என்றும் விக்ரமின் மேனேஜர் மற்றும் மகன் துருவ் விக்ரம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தவறாக பரப்பப்படும் இத்தகைய செய்திகள் வருத்தத்தை அளித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement