• Jan 18 2025

திருமண விழாவில் கட்டியணைத்த தனுஷ் - சிம்பு.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எப்போதுமே ரசிகர்களிடையே போட்டி வெடித்துக்கொண்டே இருக்கும். பிரபல நடிகர்களுக்கிடையில் நேரடியாக சண்டை இல்லாவிட்டாலும், அவர்களின் ரசிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அல்லது படங்களின் வெற்றி சாதனைகளை அடிப்படையாக வைத்து சண்டையிடுவது வழக்கம் 


அந்தவகையில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என பல ஜோடிகளின் ரசிகர்களிடையே இதுபோன்ற போட்டி நீடித்து வந்தது. சமீபகாலமாக, சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோரின் ரசிகர்களிடையே அப்படியான கருத்து மோதல்கள் தோன்றினாலும், இருவரும் தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் நல்ல நண்பர்களாகவே பார்த்து வருகின்றனர்.


இந்த நிலையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழாவில் கலந்து கொண்ட இருவரும் சந்தித்து, நெருக்கமாக பேசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.இந்த புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் உற்சாகத்துடன் "நட்பின் சின்னம்" என பாராட்டுகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் இந்த உணர்ச்சிகரமான தருணத்துக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement