• Nov 12 2025

சூட்டிங் ஸ்பாட்டில் தனுஷ் போடும் ரோயல் செட்டிங்...!ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்..!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தற்போதைய தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் எடுக்க நினைத்தாலே தயாரிப்பாளர்களுக்கு கோடி கணக்கில் செலவு என்ற ஒன்று நிரந்தரமாகிவிட்டது. இன்று, ஒரு மினிமம் ஸ்டார் ஹீரோ படம் எடுத்தால்கூட பட்ஜெட் ரூ.300 கோடிக்கு கீழ் வருவதே இல்லை.


அஜித், விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படம் ஒன்றுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவது சாதாரணமாகிவிட்டது. இதற்கு மேலாக, பிரமோஷன், மார்க்கெட்டிங் போன்ற நிகழ்ச்சிகளுக்காக கூடுதலாக பல கோடிகள் செலவழிக்கப்படுகின்றன. இந்த வரிசையில் தற்போது தனுஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் எடுத்துள்ள ‘ஸ்டார்’ ஸ்டைல் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

தனுஷ் படப்பிடிப்புக்கு தற்போது 22 பேர் கொண்ட தனிப்பட்ட குழுவுடன் வருகிறார். இதில் பவுன்சர்கள், மேக்கப் ஆர்டிஸ்ட், சமையல்காரர்கள், ஜிம் பயிற்சியாளர்கள், டச் அப் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் ஆகியோர் அடங்குவர். குறிப்பாக, இவர் வீட்டுச் சாப்பாடு தான் சாப்பிடுவதால், சமையலுக்கே தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.


இதுபோல், யோகி பாபுவும் 15 பேர் கொண்ட குழுவுடன் எப்போதும் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். இவர்களது இந்த தனிப்பட்ட ‘ஸ்டார்’ டிரீட்‌மெண்ட், படக்குழுவில் ஒரு புதிய கலாச்சாரமாக உருவாகி வருகிறது. சினிமா உலகத்தில் தொழில்முறை மாறுதல்கள் ஏற்படுவது இயல்பானதுதான், ஆனால் இந்த அளவுக்கு தனிப்பட்ட பார்வை கொடுக்கப்படுவதே தற்போது அதிக கவனத்தை ஈர்க்கிறது.

Advertisement

Advertisement