• Sep 28 2025

எண்ணம் போல் வாழ்க்கை..! – தனுஷின் வாழ்க்கை தத்துவம் ‘இட்லி கடை’ விழாவில் வைரல்!

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பன்முகத் திறமை கொண்ட நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் திகழும் தனுஷ், தனது புதிய முயற்சி "இட்லி கடை" படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், தனக்கிருந்த கனவுகள், சினிமாவுடன் கூடிய கிச்சன் பயணம் மற்றும் வாழ்க்கை பற்றிய தத்துவங்களை உருக்கமாக பகிர்ந்தார்.


அதன்போது தனுஷ், "CHEF ஆகணும் என்பது தான் என்னோட ஆசை... அதனாலேயே என்னவோ தெரியல... சமைக்கிற மாதிரியான கதைகள் தான் எனக்கு அமையுது!" என்று கூறியிருந்தார். 

தனுஷ் கூறியபடி, அவருடைய பல படங்களும் உணவு அல்லது உணவுக் கடைகளை மையமாக கொண்டதாக அமைந்துள்ளன. தனுஷ் மேலும் கூறியதாவது, " ஜகமே தந்திரம் படத்தில பரோட்டா போட்டேன்.. திருச்சிற்றம்பலம் படத்தில டெலிவரி boy.. ராயன்ல Fast food கடை ... இப்ப இட்லி கடை படத்தில இட்லி சுட்டு இருக்கேன். "எண்ணம் போல் வாழ்க்கை என்பது போல" நாம் நினைப்பது தான் நடக்கிறது...." என்றும் தெரிவித்திருந்தார்.


‘இட்லி கடை’ என்பது ஒரு சாதாரண உணவுக் கடையின் பின்னணியில் நகரும் திரைப்படம் மட்டுமல்ல. அது குடும்பம், கனவு, கடமை, சாதனை, சமூக இடையூறுகள் மற்றும் உறவுகளின் நுணுக்கங்கள் என்பவற்றை வெளிக்கொண்டு வரும் படம் என கூறப்படுகிறது.

இந்த படத்தை தனுஷ் இயக்குவதுடன், முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், நித்யா மேனன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இது தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement