நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்திற்கு பின்னர் இட்லி கடை என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவரே அதனை எழுதி, இயக்கி, நடித்து, தயாரிக்கவும் செய்துள்ளார். இதனையடுத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படமும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான் தனுஷ் தற்போது நடித்து வரும் படம் தான் குபேரா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிவருகிறது.
வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சமீபத்திய அறிக்கையின்படி அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக குபேரா மாறியுள்ளது.
டோலிவுட் செய்தி அறிக்கையின்படி குபேராவின் பட்ஜெட் ரூ.90 கோடிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பட்ஜெட் அதிகரித்துள்ளது இப்போது ரூ.120 கோடியில் வந்து நிற்கிறது. படத்தின் மொத்த பட்ஜெட் பற்றி தயாரிப்பாளர் சுனில் நரங் எதுவும் கூறவில்லை. எனினும், இது தனுஷின் சினிமா வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விலையுயர்ந்த படமாக சொல்லப்படுகிறது.
தனுஷ் மற்றும் நாகர்ஜூனாவின் நடிப்பை சுனில் நரங் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்நிலையில் குபேரன் படத்தில் தனுஷிற்கு ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டில் 36 சதவிகிதம் தனுஷின் சம்பளமாம். இருப்பினும் தனுஷ் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் அதிருப்தி அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள்து.
Listen News!