• Jan 18 2025

’ராயன்’ படத்தின் கதை கார்த்திக் படத்தில் இருந்து சுட்டதா? என்னடா இது தனுஷூக்கு வந்த சோதனை..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஒரு போலீஸ் இன்பார்மராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் போலீஸ் இன்பார்மராக நடித்த படத்தின் காப்பி தான் ’ராயன்’ திரைப்படம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’ராயன்’ திரைப்படத்தின் கதைப்படி தனுஷ் போலீஸ் இன்பார்மர் என்றும் அவருடைய குடும்பத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்ததால் அவர் போலீசை வெறுத்து மீண்டும் ரவுடிவிடம் போய் சேர்ந்து விடுவார் என்றும் அங்கு ரௌடிகளை எல்லாம் காலி செய்துவிட்டு கடைசியாக நான் இன்பார்மர் படத்தை முடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யின் ‘போக்கிரி’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் இதேபோன்று வந்துள்ள நிலையில் இந்த படம் கார்த்திக் நடித்த ’உன்னைச் சொல்லி குற்றமில்லை’ என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்று சினிமா விமர்சகர் சிவபாலன் என்பவர் தெரிவித்துள்ளார்.



’உன்னைச் சொல்லி குற்றமில்லை’ படத்தில் கார்த்தியின் நெருங்கிய சொந்தக்காரர்களே சட்டவிரோதமான செயல்களை செய்யும் நிலையில் அவரது உடன்பிறந்த தங்கை மர்ம கும்பலால் கொல்லப்படுவார். இதனை அடுத்து கேங்ஸ்டர்கள் அனைவரையும் அடித்து நொறுக்கி விட்டு கடைசியாக நான் ஒரு போலீஸ் இன்பார்மர் என்று கூறி அதன் பிறகு அவர் நார்மல் வாழ்க்கைக்கு வருவார் என்பது தான் ’உன்னைச் சொல்லி குற்றமில்லை’  படத்தின் கதை.

இந்த படம் தான் அப்படியே தற்போது   சில மாற்றங்கள் செய்து ’ராயன்’ திரைப்படமாக உருவாகியுள்ளது என்று சினிமா விமர்சகர் சிவபாலன் என்பவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement