• May 25 2026

படம் இயக்கப் போறேன்னு சொன்னப்போ வேண்டாம் என்றேன்... கென் கருணாஸ் குறித்து தனுஷ் பகீர்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘யூத்’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் வரும் மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். குறிப்பாக நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், நடிகர் கருணாஸ் மற்றும் அவரது மனைவி கிரேஸ் குறித்து பாராட்டுக்களை தெரிவித்தார். “ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை கருணாஸ் மற்றும் கிரேஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று அவர் கூறினார்.

மேலும் கென் கருணாஸ் குறித்து பேசும்போது தனுஷ் தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். அதாவது, “கென் முதலில் என்னிடம் வந்து, நான் ஒரு படம் இயக்கப் போகிறேன் என்று சொன்னபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு இளம் வயதில் இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்கிறான் என்று நினைத்தேன். அதற்கு நம்பிக்கையுடன் முடியும் என கென் கூறினார். அந்த வார்த்தையை கென் நிரூபித்துவிட்டார்.” என்று தெரிவித்துள்ளார் தனுஷ். 

Advertisement

Advertisement