• May 25 2026

திமுகவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த வடிவேல்.. விஜய்யை மறைமுகமாக தாக்குகின்றாரா?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் வடிவேலு சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக அரசியல் குறித்து அவர் தெரிவித்த சில கருத்துகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


அந்த நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு," எதுக்கு எடுத்தாலும் தி.மு.கவை அழிக்கணும்னு பேசிட்டு இருக்காங்க. நானும் பார்த்திட்டு தான் இருக்கன். எவன் எவன் அப்படி சொன்னானோ அவனை எல்லாம் ஆளவே காணோம். சினிமால பேச வேண்டிய விஷயம் எல்லாம் மேடைல தான் பேசி ஆகணும். நீ பேசிகிட்டே இரு, ஆனா, செயலில காமிக்கிற கட்சி தி.மு.க தான். நம்ம கட்சி இல்லன்னா தமிழ்நாடே அழிஞ்சிடும்." என்று கூறினார்.

இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவியதும் பலரும் இதுகுறித்து தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் அரசியல் களத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ள நடிகர் விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசினார் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement