• Jan 18 2025

மீண்டும் கணவன் - மனைவியாகும் தனுஷ் - ஐஸ்வர்யா? இணைத்து வைத்த ‘லால் சலாம்’

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து வாழ வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் இருவரும் சட்டபூர்வமாக இன்னும் விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவுக்கு பின்னர் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் அதே நேரத்தில் ஐஸ்வர்யாவின் சில நிகழ்வுகளுக்கு தனுஷ் வாழ்த்தும் தெரிவித்தார். குறிப்பாக ஐஸ்வர்யா ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிட்ட போது வாழ்த்து தெரிவித்த தனுஷ், தற்போது ’லால் சலாம்’ படத்தின் ரிலீஸ் போதும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



ஐஸ்வர்யா என்ற பெயர் குறிப்பிடாமல் அவர் வாழ்த்து தெரிவித்தாலும் அவருக்கு மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ வேண்டும் என்று விருப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுவதால் இருவரும் இணைந்து வாழ வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

தனுஷ் சமீபத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை போயஸ் கார்டனில் கட்டிய நிலையில் அந்த வீட்டில் மனைவி மகன்கள் இல்லாமல் தனியாக வாழ்வது வெறுப்பாக இருப்பதாகவும் எனவே அவர் குடும்பத்துடன் இந்த வீட்டில் சந்தோஷமாக வாழ விரும்புவதாகவும் தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறியுள்ளார். இதனை அடுத்து மீண்டும் ரஜினி குடும்பத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் எந்த நேரத்திலும் இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வது குறித்த அறிவிப்பு வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement