• Sep 29 2024

கோட் பட வசூலை முறையடித்த தேவரா.. எத்தனை கோடி தெரியுமா?

Aathira / 16 hours ago

Advertisement

Listen News!

ஜூனியர் என்டிஆர் - ஜான்வி கபூர் - கொரட்டலா சிவா  இவர்களுடைய கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் தேவரா. இந்த திரைப்படம் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்த படத்தை என்டிஆரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு தரமான படத்தை கொரட்டலா சிவா கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன.

விஜய், என்டிஆர், பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட டாப் நடிகர்களின் படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூலில் மிகப்பெரிய கலெக்ஷனை அள்ளி விடுகின்றன.

இந்த நிலையில், என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா படத்தின் முதல் நாள் கலெக்ஷன் கோட் படத்தின் வசூலை முறையடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதன்படி தேவரா  படம் இந்திய அளவில் 95 கோடிகளை முதல் நாளிலே வசூலித்துள்ளதோடு உலக அளவில் 128 கோடிக்கும் அதிகமான வசூலை செய்துள்ளதாம்.

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான தேவரா  திரைப்படம் முதல் மூன்று நாட்களிலேயே 250 கோடிகளை வசூலித்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் விஜய் நடித்த கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடிகளை வசூலித்த நிலையில், தேவரா திரைப்படம் 130 கோடிக்கும் அதிகமான வசூலை செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement