ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்ட்டாக தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய ஹிப் ஹாப் ஆதி, பின்னர் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு அவர் இயக்கி, கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. தனது வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மீசைய முறுக்கு 2 திரைப்படத்தை ஆதி இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் சைத்ரா அச்சர், ரம்யா ரங்கநாதன், கெத்திகா ஷர்மா, கருணாஸ், நாசர், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கானா பாடகர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் இறுதி வசூல் ரூ.55 கோடியை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசூல் தகவல் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
Listen News!