• Nov 22 2024

போண்டாமணியின் மறைவு மிகுந்த வருத்தத்தை உண்டாக்குகிறது- நடிகர் முத்துக்காளை

stella / 10 months ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகரான போண்டா மணி செப்டம்பர் மாதம் 19ந் தேதி 1963ம் ஆண்டு இலங்கையில் பிறந்தார். கேதீஸ்வரன் என இயற்பெயர் கொண்ட இவர், 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.


 சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட போது போண்டாவை மட்டுமே சாப்பிட்டு வந்தார். பசியை தீர்த்து வைத்த போண்டாவையும், தனது குருநாதர் கவுண்டமணியின் பெயரில் இருந்து மணியை சேர்த்து போண்டா மணி என பெயரை மாற்றிக்கொண்டார்.

தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த போண்டா மணி, கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால், மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்த நிலையில், நேற்று இரவு இறப்புக்குள்ளானார்.


இவரின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் நடிகர்  முத்துக்காளை ஊடகவியலாளருக்கு தெரிவித்ததாவது , 

எங்களோடு பயணித்த சக நடிகனின் மறைவு எங்களுக்கு பெரும் வருத்தத்தை உண்டாக்குகின்றது .அவனோட சேர்ந்து நானும் காமெடியான நடிச்சி இருக்கன் .அவனிடம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்கள் நிறைய இருக்கு அதில ஒன்று ,இரண்டு சொல்லனும் என்று நினைக்கிறேன் . ஷூட்டிங்  நேரத்தில நேரம் பிந்தாம வந்திருவான் ஷூட்டிங் ஆரம்பிக்கும் நேரத்துக்கு  முன்பதாகவே வந்திருவான் .அவனுடைய நேரம் தவறாமை எனக்கு ரொம்ப பிடிக்கும் .


கடைசி நேரத்தில அவன் சொன்ன ஒரு விஷயம் உயிரோட இருக்கும் வரைக்கும் ஓடி கொண்டே இருக்கனும் என்று ஆசைப்பட்டான் .அதே மாதிரியே அவனுக்கு அந்த ஆசை நிறைவடைந்தது . இவ்வாறு கண்ணீரோடு வருத்தம் தெரிவித்துள்ளார் .

Advertisement

Advertisement