• Jan 19 2025

மகள் கார்த்திகாவுக்கு தங்கத்தினால் அலங்காரம்- நடிகை ராதாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை ராதா. இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சிவகுமார், மோகன், சத்யராஜ் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்.

குறிப்பாக இயக்குநர் பாரதி ராஜா இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான 'முதல் மரியாதை' படத்தில், இவர் நடித்த கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்கள் மனதில் மாஸ்டர் பீஸாக நிலைத்துள்ளது .தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கின்றார்.


சினிமாவில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே, ராஜசேகர் என்கிற ஹோட்டல் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து முழுமையாக விலகினார். இவர்களுக்கு கார்த்திகா மற்றும் துளசி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகளான கார்த்திகாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மிகப்பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

ரோஹித் மேனன் என்பவரை கார்த்திகா திருமணம் செய்து கொண்டார். ஆடம்பரமாக கேரள முறைப்படி நடந்த இவர்கள் திருமணத்தில், கார்த்திகா தங்க இழையால் நெய்யப்பட்ட பட்டு புடவை அணிந்திருந்ததோடு, கை, கழுத்து என பல அடுக்குகளுடன் கூடிய தங்க ஆபரணங்களை கிலோ கணக்கில் அணிந்திருந்தார். இது பார்பவர்களையே பிரமிக்க வைத்தது. அதே போல் தன்னுடைய திருமண சடங்குகளின் போதும் விதவிதமான தங்க நகையில் ஜொலித்தார். 


இந்த நிலையில் இவர்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியுள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 300 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement