• Nov 05 2026

சேப்பாக்கம் மைதானத்தில் என்ட்ரியாகும் சிவகார்த்திகேயன்.. விசில் போட ரெடியாகும் ரசிகர்கள்

shali / 7 months ago

Advertisement

Listen News!

சென்னை நகரம் மீண்டும் ஒரு மாபெரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. நாளை சேப்பாக்கம் மைதானத்தில் “ROAR ‘26” என்ற தலைப்பில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஐபிஎல் திருவிழா சூழ்நிலையை மேலும் விறுவிறுப்பாக மாற்றும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் பங்கேற்க உள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியதும் ரசிகர்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ளது. 

தனது நகைச்சுவை உணர்வும், இயல்பான மேடை நிகழ்ச்சிகளும் மூலம் ரசிகர்களை எளிதில் கவரக்கூடிய சிவகார்த்திகேயன், இந்த மேடையில் என்ன சிறப்புகளை வழங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement