• Sep 20 2024

கிரிக்கெட் வீரர் எம். எஸ் தோனி தயாரிப்பில் நடிக்கவுள்ள நயன்தாரா- ஆச்சரியத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமா மூலம் திரைத்துறைக்குள் அறிமுகமான நடிகை தான் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இதைத்தொடர்ந்து சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் போன்ற முக்கிய பிரபலங்களுடன் நடித்து சினிமாவின் மிக பிஸியான நடிகையாக வலம் வருகின்றார் .

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவரது நடிப்பில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தை இவரது காதலனான விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ள இவரைப் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்எஸ் தோனி தமிழ் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

அவர் தயாரிக்கும் முதல் தமிழ் தமிழ் திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement