• Sep 20 2024

பிரபல தயாரிப்பாளருக்கு எதிராக அரை நிர்வாண போராட்டம் - நடிகைக்கு நேர்ந்த கதி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமா நடிகையாக விளங்குபவர் தான் சுனிதா போயா.இவர் பல படங்களில் துணைப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் துணை நடிகையான சுனிதா நடித்த படம் ஒன்றுக்கு சம்பளம் கிடைக்கவில்லையாம். இதையடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளரான Bunny வாசுவிடம் சம்பளம் கேட்டிருக்கிறார்.

அப்படியும் கிடைக்காததால் ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் Bunnyவாசுவின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தின் முன்பு அரை நிர்வாண போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார் சுனிதா.

மேலும் ஹைதராபாத் முனிசிபாலிட்டியில் வேலை செய்பவர்கள் சுனிதா போராட்டம் நடத்துவதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுனிதாவை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அத்தோடு வாசுவுக்கெதிராக சுனிதா போராட்டம் நடத்தியது இது முதல் முறை அல்ல. படங்களில் வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை வாசு பயன்படுத்திவிட்டதாக சுனிதா முன்பு புகார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வாசுவின் அலுவலகம் தவிர்த்து தெலுங்கு பிலிம் சேம்பர் அலுவலகம் முன்பும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement