• Sep 28 2024

ஹீரோவாக அறிமுகமாகும் காமெடி நடிகர்! தம்பி ராமையாவின் அடுத்த பட அப்டேட்!

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் காமெடி நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றே கூற வேண்டும். அவ்வாறே சமீபத்தில் காமெடி நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையாவின் அடுத்த பட அப்டேட் கிடைத்துள்ளது.


தம்பி ராமையா என்பவர் தமிழகத் திரைப்படத்துறையின் நடிகரும் இயக்குனரும் ஆவார். வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்னும் படத்தை இவர் இயக்கி உள்ளார்.இவர் கும்கி, கழுகு, தலைவா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.


இவ்வாறான இவர் அடுத்ததாக லீட் ரோலில்  ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். குறித்த படத்தின் போஸ்டரை படக்குழு தம்பி ராமையாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளது. ராஜகிளி என பெயரிடபட்டுள்ள குறித்த படத்தை உமாபதி ராமையா இயக்குகின்றார்.


Advertisement

Advertisement