• Oct 08 2024

பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை... பிரபல இயக்குனர் மோகன் ஜி கைது...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல தமிழ் பட இயக்குனர் மோகன் ஜி வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் இந்த திரைப்படங்களில் பெண் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும், நாடகக் காதல்களையும் விமர்சித்து படத்தை இயக்கியுள்ளார். 


இவரது திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து நிலையில் தொடர்ந்து பாமக ஆதரவாளராகவே தன்னை காட்டிக் கொண்டு வந்தார். இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜியை போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்து தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்தார். மேலும், பழனி பஞ்சாமிருதத்தில் சர்ச்சைக்குரிய பொருள் ஒன்று இருப்பதாகவும் பேசி இருந்ததாக கூறப்படுகிறது. 


இந்தநிலையில் இயக்குனர் மோகன்ஜியை வீடியோ பதிவு ஒன்றில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாக கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இருந்த போதும் கைதுக்கான முழுமையான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement