• Jun 01 2025

ஜெட் வேகத்தில் முன்னேறும் நகைச்சுவை நடிகர் சூரி..! " மாமன்" படத்தால் அடித்த ஜாக்பாட்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கியவர் நடிகர் சூரி. இவர் பல படங்களில் தனது திறமையை நிரூபித்து ரசிகர்களின் மனங்களை வென்றிருந்தார். இன்று முக்கிய கதாப்பாத்திரங்களிலில் நடித்து ஹீரோவாக உயர்ந்துள்ளார். குறிப்பாக விடுதலை திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, அதனை அடுத்து வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் மற்றும் சரியான திட்டத்துடன் நடித்து வருகின்றார்.


அவரின் அண்மைய திரைப்படமான “மாமன்” தற்போது திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், அதன் வியாபாரச் சாதனை தற்போது சினிமா வட்டாரங்களில் பேசப்படும் முக்கிய செய்தியாக மாறியுள்ளது. “மாமன்” திரைப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இது ஒரு கிராமப்புற வாழ்க்கையை மையமாகக் கொண்ட, பாசம், காதல் ஆகியவற்றைத் தழுவிய குடும்பக் கதையம்சம் கொண்ட படம். இப்படத்தில் சூரியுடன் இணைந்து பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் பற்றிய முக்கியமான அப்டேட் என்னவென்றால், “மாமன்” திரைப்படத்தின் ஒளிபரப்புக் காப்புரிமையை ஒரு பிரபலமான ஸ்ட்ரீமிங் தளம் வாங்கியுள்ளது. இதற்காக 12 கோடி படக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக ஹாலிவூட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது சூரியின் திரையுலக பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது. அவர் ஹீரோவாக நடித்த முதல் படமாகிய “விடுதலை” படத்திற்குப் பிறகு, இவரது மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்து வருவதை இது உறுதிப்படுத்துகிறது.

Advertisement

Advertisement