பிக்பாஸ் சீசன் 8ன் ஆரம்பத்தில் 24 போட்டியாளர்கள் பங்கெடுத்திருந்தார்கள். தற்போது ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில், மீதமாக பத்து போட்டியாளர்களே பிக்பாஸ் டைட்டிலுக்கான போட்டியில் பங்கெடுத்து உள்ளனர்.
கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 8ல் டிக்கெட் டு பினாலே டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்கள் கடும் வேகத்தில் விளையாடி வருவதோடு தங்களுக்கான பாயிண்டுகளை பெறுவதற்காக ஏனைய போட்டியாளர்களிடம் கெஞ்சியும் வருகின்றனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளரான அருண் பிக் பாஸுக்கு கோட் வேர்ட் ஒன்றை சொல்லியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அருண் சொன்ன கோரிக்கையை நிறைவேற்றுவாரா பிக் பாஸ் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதாவது அருணிடம் தற்போது மூன்று பாயிண்ட் இருக்கும் நிலையில், நள்ளிரவில் கேமரா முன் பேசிய அருண் தனக்கு ஈசியாக டாஸ்க் கொடுத்தால் தான் ஐந்து பாயிண்ட்டை எடுத்து முன்னேறி விடுவேன் என்று நேரடியாகவே சொல்லியிருந்தார்.
எனவே அருண் சொன்னதுக்கு பிக்பாஸ் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை இனிவரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும். அவர் சொன்ன மாதிரியே ஈஸியான டாஸ்க் வைத்து அருணின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா? இல்லையா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!