• Jul 10 2025

உலக பாடல் ட்ரெண்டிங் லிஸ்டில் முன்னனியில்...சின்மயி பாடிய "முத்தமழை " பாடல்..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய 'முத்த மழை' பாடல் தற்போதைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


அந்த பாடலை படத்தில் தெனாலி புகழ் பாடகி தீ பாடியிருந்தாலும் விழாவில் சின்மயி பாடிய லைவ் ப்ரெஸன்டேஷனே வைரலாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. சின்மயியின் குரலும் உணர்வும் இந்த பாடலுக்கு புதுவிதமான உயிரூட்டியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதனிடையே சின்மயி பாடிய 'முத்த மழை' பாடல் உலகளவில் ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த பாடல் உலக ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்டில் 10வது இடம் மற்றும் இந்திய ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்டில் 8வது இடம் மேலும் இந்த சாதனையால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் பாடகி சின்மயி மீண்டும் தனது இடத்தை உறுதி செய்துள்ளார் என அவரது ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement