• Jul 10 2025

STR 49 இல் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர்..! யார் தெரியுமா..?

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சிலம்பரசனை முன்னணியில் வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதன் புரோமோ காட்சிகளின் படப்பிடிப்பு இன்று சென்னை எழும்பூரில் சிறப்பாக நடைபெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக சிம்பு நடித்துள்ளார். மேலும் இது சிம்புவின் 49 ஆவது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த ப்ரோமோவில் ஒரு சுவாரசிய அம்சமாக இயக்குநர் நெல்சன் தில்லிப்குமார் முக்கியமான தோற்றத்தில் நடித்துள்ளார். ப்ரோமோ ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


படக்குழுவின் தகவலின்படி இந்த புதிய திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்பு வரும் ஜூலை 16ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது.சமீபத்தில் வெற்றிமாறனின் ‘விடுதலை’ வெற்றி பெற்ற நிலையில், STR உடன் உருவாகும் இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

Advertisement

Advertisement