• Oct 06 2024

விஜய் சேதுபதியின் ஹிட் படத்தை பார்க்க மாட்டேன்.. சின்மயி வெறுப்புக்கு என்ன காரணம்?

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’மகாராஜா’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. இந்நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் கொண்டாடி வரும் நிலையில் பாடகி சின்மயி மட்டும் அந்த படத்தை நான் பார்க்க மாட்டேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான ’மகாராஜா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது விஜய் சேதுபதியின் 50வது படம் என்ற பெருமையை பெற்ற இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விறுவிறுப்பான திரைக்கதை, விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பு, ஒரு சில நிமிடங்களுக்கு ஒரு திருப்புமுனை, கடைசிவரை கொண்டு செல்லப்பட்ட சஸ்பென்ஸ் என இந்த படத்தில் பல பிளஸ் பாயிண்ட்கள் இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிய பின்னரும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து பாடகி சின்மயி கூறியபோது ’மகாராஜா’ திரைப்படத்தை நான் பார்க்க மாட்டேன், அந்த படம் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கதையும் கொண்டதாக இருந்தாலும், அந்த படத்திற்கு வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். அதனால் அந்த படத்தை நான் பார்க்கப் போவதில்லை.

உலகத்திலேயே கோலிவுட் திரை உலகில் மட்டும் தான் பாலியல் ரீதியாக குற்றங்கள் செய்தவர் என குற்றம் சாட்டப்பட்ட வரை பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் பாடல் எழுத பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement