• Apr 19 2026

'செருப்பால அடிப்பன்..' விக்ரமுக்கு ஆவேசமாக பேசிய பெண் போட்டியாளர்! வைரலாகும் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டுள்ள நிலையில், இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் இடையே, பல்வேறு சண்டைகள், குழப்பங்கள், காதல், போட்டி, பொறாமை என தொடர்ந்தாலும், சில நேரங்களில் அவைகளும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுக் கொண்டு தான் உள்ளன.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலுள்ள சரவண விக்ரமுக்கு செருப்பால் அடிப்பேன் என சொல்லுகிறார் பூர்ணிமா. தற்போது குறித்த காணொளி வைரலாகி வருகிறது.


அதன்படி, பிக் பாஸ் வீட்டில் டிசேர்ட்டுகளை எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்த பூர்ணிமா, மாயா, நிக்சன் ஆகியோர் இருக்கும் இடத்திற்கு வந்த விக்ரம், பூர்ணிமாவிடம் ஏதோ சொல்ல, பதிலுக்கு செருப்பால் அடிப்பன் என பூர்ணிமா சொல்லுகிறார். இதை தொடர்ந்து, விக்ரம் திரும்பிச் செல்கிறார்.  

குறித்த வீடியோ தற்போது வைரலாகிக் கொண்டுள்ளது. மேலும் இந்த வாரம் விக்ரம் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதற்கு காரணம், பிக் பாஸ் வீட்டில் முதுகுத்தண்டு இல்லாமல் விக்ரம் இருப்பது தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement