உலக பணக்காரரான ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமண நிகழ்ச்சிகள் கடந்த ஒரு சில மாதங்களாகவே ஆரம்பிக்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஆனந்த் அம்பானியின் ப்ரி வெடிங் நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில், அதில் பிரபலங்கள் தொடக்கம் அரசியல் பிரமுகர்கள், உலக அளவில் இருந்து பிரபல தொழில் அதிபர்களும் பங்கு பற்றி இருந்தார்கள்.
இதைத்தொடர்ந்து தற்போது ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இதில் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடி அசத்தியுள்ளார். மேலும் இந்த விழாவை நடிகர், நடிகர்கள் நடனமாடி களைகட்ட வைத்துள்ளனர்.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களாக ரன்பீர் கபூர்-ஆலியா பட், தீபிகா படுகோன் - ரன்வீர் சிங், அட்லீ- பிரியா, காஜல் அகர்வால், சல்மான்கான், திஷா பதானி, கியாரா அத்வானி, ஜான்வி கபூர், மாதுரி தீட்சித், வித்யா பாலன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர்கள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.




                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!