தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. இவரும் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகின்றார். கடந்த ஜூலை 2ம் திகதி தனது காதலரான நிக்கோலாய் சத்தேவை திருமணம் செய்து கொண்டார்.
எனினும், வரலட்சுமிக்கு நிக்கோலாய் சத்தேவ் தாலி கட்டிய திருமண புகைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை. தனது புகைப்படங்களை ரகசியமாகவே காத்து வருகின்றார் வரலட்சுமி.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு வெளிநாட்டிற்கு தனது கணவருடன் ஹனிமூன் சென்ற வரலட்சுமி, அவரை அணைத்தவாறு போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தற்போது வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது படுக்கை அறையில் நாய்க்குட்டிக்கு மசாஜ் செய்துவிட்டு அதனை கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ஹனிமூன் சென்ற இடத்தில் புருஷனை கொஞ்சாமல் நாய்க்குட்டியவா வச்சு கொஞ்சிட்டு கொண்டு இருக்கீங்க என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
Listen News!