விஜய் டிவி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து அறிமுகமாகி பின்னர் பிக்போஸ் சீசன் 4 இன் மூலம் அதிகபட்ச ரசிகர்களை தன்வசமாக்கிய நடிகர் ரியோ ராஜ் ஜோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை வென்றார். பட வாய்ப்புகள் இல்லாமையினால் விஜய் டிவியில் தான் தொகுத்து வழங்கிய ஜோடி ஆர் யு ரெடி நிகழ்ச்சியில் மீண்டும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த நிலையில் இவர் அடுத்து கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த படத்தின் First Look போஸ்ட்டரினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது x தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ரியோராஜ் மண்டைக்குள் பல பெண்கள் சித்திரவதை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
குறித்த திரைப்படத்தின் போஸ்ட்டரிற்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போஸ்ட்டருடன் "ஆண்களுக்கு ஆதரவாக , ஆறுதலாக பேச, தில்லாக களமிறங்கும் தம்பி அந்த தில்லுக்கு துட்டு கொடுக்கும் இயக்குநர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என கூறி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
Listen News!