• Feb 20 2025

சாய் பல்லவியின் தெலுங்கு பட வசூல் எவ்வளவு தெரியுமா..?

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

சந்தூ மொண்டேடி இயக்கத்தில் சாய் பல்லவி மற்றும் நாகசைத்தன்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'தண்டேல்' 50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படமானது உலக அளவில் ரூ. 100 கோடி வசூலை அடைந்துள்ளதுடன் படக்குழு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் அதிரடி மற்றும் காதல் கதைத் தொகுப்புடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


பெப்ரவரி 7ஆம் தேதி முதல் நாளிலேயே ரூ.11.5 கோடி வசூலித்த தண்டல் பாக்ஸ் ஆபிஸ் பயணத்தைத் தொடங்கியது. இது முதல் வார இறுதியில் அதன் வலுவான ஓட்டத்தைத் தொடர்ந்தது சனிக்கிழமை ரூ 12.1 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ 12.75 கோடியும் பெற்றது. படம் வெளியான முதல் வாரத்திலேயே 49.4 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இருப்பினும் தொடக்க வார இறுதிக்குப் பிறகு படம் தொடர்ந்து வசூலில் சரிவைக் கண்டது.


படத்தின் வெற்றி அதன் அதிரடியான பாட்டுகள்நகைச்சுவையான காட்சிகள் மிகுந்த வரவேற்பினை வழங்கியுள்ளது.'தண்டேல்' திரைப்படத்தின் வெற்றி தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த வெற்றியுடன் சாய் பல்லவி மற்றும் நாகசைத்தன்யா மீண்டும் பெரிய படத்தில் இணைந்து நடிப்பதற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 'தண்டேல்' திரைப்படம் சர்வதேச அளவில் உயர்ந்த வசூலை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement