மலையாள சினிமாவில் ரதி நிர்வேதம், சால்ட் அண்ட் பெப்பர் உள்ளிட்ட பல முன்னணி திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ஸ்வேதா மேனன். சமீபத்தில் வெளியான 'ஜான்கர்' எனும் த்ரில்லர் படத்திலும் அவர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது அடுத்த திரைப்படமான 'கரம்' வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், நிதி இலாபத்திற்காக ஆபாச படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்ததாக ஸ்வேதா மேனன் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மலையாள ஊடகமான 'மாத்ருபூமி' வெளியிட்ட செய்தியின்படி, சமூக ஆர்வலர் மார்ட்டின் மெனச்சேரி புகார் அளித்ததைத் தொடர்ந்து, எர்ணாகுளம் சிஜேஎம் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எதிராக பொது ஒழுக்கம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (AMMA) நடத்தும் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஸ்வேதா மேனன் போட்டியிடுகிறார். இவருடன் வேட்புமனு தாக்கல் செய்த ஆறு பேரில் நான்கு பேர், அதில் மூத்த நடிகர் ஜெகதீஷ் உட்பட, தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
Listen News!