• Jan 19 2025

இந்த ஷாக்ல இருந்து வெளிய வர முடியலையா ரோகிணி? முத்துவுக்கு ராஜ வாழ்க்கை கிடைச்சிருக்கு..!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ரோகிணியை விஜயா மிரட்டுகிறார். இனி என்கிட்ட ஏதும் மறைச்சா உன்ன சும்மா விட மாட்டேன் என சொல்ல, இதுக்கே இப்படி என்டா என்ன பத்தி முழுசா தெரிஞ்சா என்ன ஆகும் என பயப்படுகிறார்.

மறுபக்கம் செல்வம் முத்துவை புது கார் ஒன்று என் நண்பனுக்கு பாத்து இருக்கு, அது நல்ல கண்டிஷன்ல இருக்கா செக் பண்ணி பார்க்குமாறு அழைத்துப் போகிறார். அங்க போன முத்து காரை பார்த்துவிட்டு கார் நல்ல கண்டிஷன்ல இருக்கு. காசு இருந்தா நானே வாங்கி விடுவேன் என வருத்தப்பட்டு கூறுகிறார். இதனை பின்னால் இருந்து மீனா பார்க்கிறார் .

அதன் பின்பு நாளைக்கு நான் சொல்ற இடத்துக்கு முத்துவ  அழைச்சிட்டு வாங்க என செல்வத்திடம் கூறிவிட்டு மீனா செல்கிறார்


இதைத்தொடர்ந்து முத்துவை அழைத்த மீனா கோயிலுக்கு போயிட்டு வருவோம் என அழைத்துப் கூட்டிப் போகிறார். அங்கு மீனாவின் அம்மாவும் தங்கையும். செல்வம் மற்றும் வாங்கிய புது காரும் இருக்கிறது.

இதை பார்த்து ஒன்றும் புரியாமல் முத்து, இந்த கார் ஏன் இங்க  நிக்குது அப்படி என்று புலம்புகிறார். அதன் பின்பு ஐயர் வந்து காரை பூஜை பண்ணி முடித்தவுடன், முத்துவுக்கு சர்ப்ரைஸ் ஆக மீனா காரின் சாவியை கொடுத்து இனி இது உங்க கார் என  சொல்கிறார்.

இதை அடுத்து முத்துவும் மீனாவும் புது காரில் ஏறி ஓட்டிப் பார்க்கிறார்கள். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement