• Jan 19 2025

நான் சொல்றத மட்டும் தான் கேட்கணும், எனக்கே ஐடியாவா? சிவகார்த்திகேயனை கப்சிப் ஆக்கிய முருகதாஸ்..

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தில் சில காட்சிகளை சேர்க்க வேண்டும் என்று ஐடியா கூறியதாகவும் ஆனால் ஏஆர் முருகதாஸ்அதெல்லாம் முடியாது, நான் எடுப்பதுதான் படம்என்று கராராக கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்தபிரின்ஸ்படம் தோல்வி அடைந்தால் அதிலிருந்து அவர் கதை மற்றும் திரைக்கதையில் தலையிட்டு வருகிறார் என்றும் குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்தமாவீரன்திரைப்படத்தின் இயக்குனரை அவர் டார்ச்சர் செய்ததாகவும் அதனால் இருவருக்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.



இந்த நிலையில் தற்போது அவர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் நிலையில் ஒரு சில காட்சிகளை சேர்க்க வேண்டும் என்றும் தனது ரசிகர்களை திருப்தி செய்ய பாடல்களில் ரிச் இருக்க வேண்டும் என்றும் சில காமெடி காட்சிகள் இருக்க வேண்டும் என்றும் ஐடியா கூறியதாக தெரிகிறது.

ஆனால் இந்த கதைக்கு அதெல்லாம் சரியாக வராது, நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் படமாக எடுப்பேன், எனக்கு ஐடியா கூறும் வேலையெல்லாம் வேண்டாம்என்று சிவகார்த்திகேயனை கப்சிப் என அடக்கி விட்டதாக பட குழுவினர்களிடமிருந்து வந்த தகவல் கூறுகிறது.



எனவே இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமாக சிவகார்த்திகேயன் வழக்கமான பாணி இல்லாமல் புதுவிதமான சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மற்ற புதிய முக இயக்குனர்களிடம் அவர் ஐடியா கூறியது போல் ஏஆர் முருகதாஸிடம் நடக்காது என்றும் தெரிய வருகிறது.

இந்த நிலையில்குட்நைட்இயக்குனர் விநாயகர் சந்திரசேகரன், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் நிலையில் அந்த படத்தில் இப்போதே அவர் சில ஆலோசனைகளை இயக்குனருக்கு கூறி வருவதாக தெரிகிறது.

Advertisement

Advertisement