• Jan 19 2025

பாக்கியாவுக்கு பழனிச்சாமி கொடுத்த வாக்குறுதி.! கோபி கிச்சனில் தகராறு செய்த ஜோசெப்! ஜெனிக்கு புது மாப்பிள்ளை ரெடி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம். 

அதில், ராதிகா பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்க, அதை ராமமூர்த்தி, ஈஸ்வரி பாக்கிறார்கள். அதன்பின் கிச்சினுக்கு  சென்று அங்கு சமைப்பவரிடம் எப்பவுமே ஒரே மாதிரி சமைக்கனும் டேஸ்ட் மாறக்கூடாது, கோபிட பிசினஸ்ஸ நீங்க தான் நல்லபடியா கொண்டு செல்லனும் என கூறுகிறார்கள்.

இதை தொடர்ந்து கோபியிடம் சொல்லிவிட்டு இருவரும் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கு பாக்கியாவும் வந்து அவர்களை சாப்பிடுமாறு சொல்ல, தாம் கோபி ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு வந்ததாக சொல்கிறார்கள். அந்த நேரத்தில் பாக்கியாவை இருக்க வைத்து ஈஸ்வரி கோபியின் கிச்சனில் நிறைய பேர் வந்தாங்க, நிறைய ஆடர் போச்சு என பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த இடத்தில் அங்கு எடுத்த போட்டோவை பிரேம் பண்ணி கொண்டு வந்து காட்டுகிறார் செழியன். அதில் தான் அழகாக இருப்பதாக ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார்.

இதை தொடர்ந்து பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு  செல்ல அங்கு பழனிச்சாமி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவர்களை செல்வி விழுந்து விழுந்து கவனிக்கிறார். மேலும் பாக்கியா ரெஸ்டாரன்ட், இரண்டையும் மாறி மாறி பார்ப்பதை பற்றி பழனிச்சாமியிடம் கூற, அவர் பிஸ்னஸ் என்றா வீட்டிற்கு போன பிஸ்னஸ் பற்றி யோசிக்க கூடாது, ரெஸ்டாரண்ட் வந்தா வீட்ட பத்தி யோசிக்க கூடாது என அட்வைஸ் பண்ணுகிறார்.


அதற்கு பாக்கியா நன்றி சொல்லிவிட்டு எனக்கு எப்பவுமே அட்வைஸ் பண்ணுங்க எனக்கு அட்வைஸ் பண்றதுக்கு ஒரு ஆள் வேண்டும் என்று சொல்ல, நான் உங்க கூட இருப்பேன் என சொல்கிறார். செல்வியும் அந்த நேரத்தில், எப்பயும் அக்கா கூட இருப்பீங்களானு கேட்க, அவரும் ஆமா.. எப்பையும் சப்போர்ட்டா இருப்பேன் என்ன சொல்கிறார்.

இன்னொரு பக்கம் கோபியும் அவரது நண்பரும் கிச்சனில் இருந்து பேசிக் கொண்டிருக்க அங்கு ஜெனியின் அப்பா ஜோசப் வருகிறார். அவரை கோபி பார்த்ததும் இது செழியனின் மாமா என தனது நண்பருக்கு அறிமுகப்படுத்துகிறார்.

அதற்கு ஜோசெப், அதுதான் என் பொண்ணுக்கு டிவோசுக்கு கொடுத்திருக்கேன்ல அங்க பாப்போம் என கோபமாக பேசுகிறார். மேலும் என் பொண்ண அழ தெரியாம வளர்த்தன் ஆனா இப்போ அவ முகத்துல சந்தோசம் இல்லை என திட்டிட்டு இருக்கிறார்.

அது மட்டும் இன்றி ஜெனிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுவதற்கு பையன் எல்லாம் பார்த்தாச்சு என சொல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement