• Jan 19 2025

அவர் அடித்ததில் வயிற்றிலிருந்த குழந்தை... இன்னொரு குழந்தை பிறந்து இறந்தே விட்டது! கசப்பான அனுபவத்தை சொன்ன சீரியல் நடிகை

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் நடித்து  பிரபலமானவர்தான் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானர். அந்த படத்தின் பின்னர் புஷ்பா புருஷன் என்ற வசனம் மிகவும் பிரபலமானது.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்திலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராம் சீரியலிலும் நடித்து வருகிறார்.


பாக்கியலட்சுமி சீரியலில் இவர் தற்போது, கர்ப்பமாக உள்ளார். இனி வரும் கதைகளில் அவர் அதனை வளர்ப்பாரா இல்லை கலைப்பாரா என பொறுத்து இருந்து பார்ப்போம். 

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டியொன்றில் கலந்துகொண்ட ரேஷ்மாவிடம், நீங்கள் வாழ்க்கையில் மனது உடைந்து அழுத நாள் எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு மிகவும் உருக்கமாக பதில் அளித்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், நான் கர்ப்பமாக இருக்கும் போது ஒரு நாள் என்னுடைய முன்னாள் கணவர் என்னை அடித்துவிட்டார். அப்போது  வயிற்றில் இருந்து குழந்தை பாதி வெளியே வந்துவிட்டது. 

இதையடுத்து, என்ன செய்வதென்று தெரியாமல் நானே கார் எடுத்துக்கொண்டு மருத்துவமனை வரை சென்றேன். அதன்பின் என் மகன் ரகுல் பிறந்து 9 மாதம் வரை இன்குபேட்டரில் தான் இருந்தான். இதனை என்னால் சமாளிக்க முடியாத நிலை வந்தது. அதனால் இந்தியாவுக்கு வந்தேன். என் மகனுக்குகாக பல மருத்துவமனைகளை பார்த்து சரி செய்திருக்கிறேன்.

ஏற்கனவே ரிலேஷன்ஷிப்பிற்கு முன்பு எனக்கு ஒரு பையன் பிறந்து இறந்துவிட்டான். அந்த விஷயம் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இவனுக்கும் ஏதும் ஆகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என உருக்கமாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement