தமிழ்த் திரை உலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் இரவு பகல் பாராமல் நிற்க கூட நேரம் இன்றி பம்பரம் போல் சுழன்று நடித்து வருகின்றார். அந்த அளவிற்கு யோகி பாபு கைவசம் பல படங்கள் காணப்படுகின்றன.
ஆரம்பத்தில் காமெடி நடிகராக இருந்த யோகி பாபு தற்போது கதாநாயகனாகவும் கலக்கி வருகின்றார். ஒவ்வொரு வாரமும் யோகிபாபுவின் படம் வெளியாகும் என்ற நிலைமையில் தற்போது யோகி பாபு முன்னணியில் திகழ்கின்றார். இவர் நடிப்பில் இறுதியாக விடாமுயற்சி மற்றும் பேபி அண்ட் பேபி ஆகியவை வெளியாகியிருந்தது.
d_i_a
இதை தொடர்ந்து இன்று காலை சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஷூட்டிங்காக யோகி பாபு சென்ற கார் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. இதை அறிந்த பலரும் யோகி பாபுவுக்கு என்ன நடந்தது என தீவிரமாக விசாரித்து வந்தார்கள்.
இந்த நிலையில் யோகி பாபு விபத்து தொடர்பான செய்தி பொய் என்றும் தான் நன்றாகத்தான் உள்ளதாகவும் பேசிய ஆடியோ ஆதாரம் ஒன்று வெளியாக உள்ளது. இதைக் கேட்ட ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளார்கள்.
அதன்படி அவர் கூறுகையில், சார் அது ஒரு ஃபேக் நியூஸ். நான் நன்றாக தான் இருக்கின்றேன். அது கம்பெனி வண்டி அது தான் லைட்டா முட்டிக்கிச்சு. மற்றபடி வேறு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த தகவலை எனக்கு தெரிவித்ததற்கு நன்றி. மேலும் இந்த செய்தி பொய் என்று சொல்லிவிடுங்கள் என யோகி பாபு தெரிவித்துள்ளார்.
Listen News!