• Jan 26 2025

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் தற்போது வந்த அதிரடி தகவலின் படி நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்ய பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.. 


சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோ ஒளிபரப்பப்பட்டபோது நடிகர் அல்லு அர்ஜுனா அதனை பார்க்க வந்தார். அப்போது அவரை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால்  போலீசார் தடியடி நடத்தியதில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ரசிகை ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அல்லு அர்ஜுன் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Advertisement

Advertisement