பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இன்று போலீஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கு சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை கைது செய்ய போலீசார் வந்த தருணத்தில் அவரது மனைவி கண்ணீர் மல்க நின்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.
அல்லு அர்ஜுன் தற்போது கைது செய்து விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை கைது செய்ய போலீசார் வந்த போது அவரின் மனைவி கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்லி கன்னத்தில் முத்தம்மிட்டு சென்றார் அல்லு அர்ஜுன் இந்த சம்பவம் ரசிகர்களுக்கு சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இணையத்திலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சமீபத்தில் புஷ்பா 2 படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை சம்பந்தப்பட்ட சந்தியா தியேட்டர் மீதும், அல்லு அர்ஜுன் மீதும் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
"d_i_a
இந்நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில்தான் புஷ்பா 2 திரைப்படம் 1000 கோடி வசூல் செய்ததை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் இந்த கைது சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!