• Feb 27 2026

ரம்யா பாண்டியனுக்கு ஜோடியான பிக் பாஸ் டைட்டில் வின்னர்! வெளியான சுவாரசிய தகவல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

'தேன்' மற்றும் 'தகராறு' படங்களை இயக்கிய கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தயாராகும் புதிய படம் தொடர்பில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த படத்தில் பிக் பாஸ் 1 டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு  ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.

இந்த படம் சுகுமார் ஒளிப்பதிவில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.


இந்த நிலையில், குறித்த படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ள ரம்யா பாண்டியன், தனது புகைப்படமொன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகியுள்ளது. 

மேலும், குறித்த படத்தில் ஆரவ்க்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளதோடு, அவர்கள் இருவரும் 12 வயது குழந்தைக்கு பெற்றோர்களாக நடித்துள்ளார்களாம்.


இந்த படத்தில் பேபி கிருத்திகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், ஜான்விஜய், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில்  நடித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் ரம்யா பாண்டியன் தனது டப்பிங் பணியில் ஈடுபட்ட புகைப்படத்தை வெளியிட், அது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement